கடன் சுமையில் தத்தளிக்கும் யெஸ் பேங்க்.. கட்டுப்பாட்டில் எடுத்தது ரிசர்வ் வங்கி..!

கடன் சுமையில் தத்தளிக்கும் யெஸ் பேங்க்.. கட்டுப்பாட்டில் எடுத்தது ரிசர்வ் வங்கி..!
கடன் சுமையில் தத்தளிக்கும் யெஸ் பேங்க்.. கட்டுப்பாட்டில் எடுத்தது ரிசர்வ் வங்கி..!

கடன் சுமையில் தத்தளித்து வரும் யெஸ் பேங்க் நிறுவனத்தை தற்காலிக கட்டுப்பாட்டில் எடுத்திருக்கும் ரிசர்வ் வங்கி, வாடிக்கையாளர்கள் அந்த வங்கிக் கணக்கில் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் எடுப்பதற்கு தடை விதித்துள்ளது.

மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது யெஸ் வங்கி. இந்த வங்கி சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாய் அளவு வாராக் கடனால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கூடுதல் நிதி திரட்டும் முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில், பாரத ஸ்டேட் வங்கி தலைமையிலான வங்கிகள் குழுமம் யெஸ் வங்கியை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவரும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் யெஸ் வங்கியின் மோசமான நிதி நிலையை ‌கருத்தில் கொண்டு, மத்திய அரசுடன் ஆலோசனை நடத்தி அந்த வங்கி நிர்வாகத்தை 30 நாட்களுக்கு எடுத்துக் கொள்வதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

மறுசீரமைப்பு அல்லது இணைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் வங்கி வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை காப்பாற்றுவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதில் பாரத ஸ்டேட் வங்கியின் முன்னாள் தலைமை நிதி அதிகாரி பிரஷாந்த் குமார், யெஸ் வங்கியின் நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com