ரிசர்வ் வங்கி ஆளுநர் வரும் 19-ஆம் தேதி ராஜினாமா?

ரிசர்வ் வங்கி ஆளுநர் வரும் 19-ஆம் தேதி ராஜினாமா?
ரிசர்வ் வங்கி ஆளுநர் வரும் 19-ஆம் தேதி ராஜினாமா?

ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் ராஜினாமா செய்ய போவதாக மீண்டும் தகவல் வந்துள்ளது.

வரும் 19-ஆம் தேதி நடக்க இருக்கும் கூட்டத்தில் ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் தனது ராஜினாமாவை அளிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நிதி விவகாரத்தில் மத்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேலுக்கும் இடையிலான மோதல் வலுத்து வருகிறது. சமீபத்தில், வங்கிகளில் 50 கோடிக்கும் மேல் கடன் வாங்கி திரும்ப செலுத்தாதவர்களின் பெயர்களை தெரிவிக்கவில்லை என கூறி உர்ஜித் படேலுக்கு மத்திய தகவல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.

இந்த சூழலில் உர்ஜித் படேல் தனது பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக தகவல் வெளியான வண்ணம் உள்ளது. எனினும் மத்திய அரசு தொடர்ந்து ரிசர்வ் வங்கிக்கு அழுத்தம் கொடுக்க முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன், ராகுல் டிராவிட் பொறுமையாக விளையாடி அணிக்கு வலுவான தளம் அமைத்து கொடுப்பது போல ரிசர்வ் வங்கி செயல்பட வேண்டும் என தெரிவித்துள்ளார். மத்திய அரசு கார் ஓட்டுநர் என்றால் ரிசர்வ் வங்கி சீட் பெல்ட். சீட்பெல்ட் வேண்டுமா வேண்டாமா என்பதை அரசு தான் முடிவெடுக்க வேண்டும். ஆனால் சீட்பெல்ட் அணிந்து கொண்டு கார் ஓட்டினால் விபத்துகளில் இருந்து தப்பலாம் என தெரிவித்துள்ளார். அதே போல நிதி சந்தையை வலுவாக வைக்கும் பொறுப்பு ரிசர்வ் வங்கிக்கு உள்ளதால் ரிசர்வ் வங்கியால் மத்திய அரசின் கருத்தை ஏற்காமல் மறுக்கவும் முடியும் என அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com