ரூபாய் தாள்களில் நட்சத்திரக் குறியீடு: பொதுமக்களின் சந்தேகத்துக்கு விடையளித்த ரிசர்வ் வங்கி!

ரூபாய் தாள்களில் உள்ள வரிசை எண்ணுடன் நட்சத்திர குறியீடு இருந்தாலும் அவை செல்லும் என ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது.

ரூபாய் தாள்கள் சிலவற்றில் வரிசை எண்களுடன் நட்சத்திர குறியீடு இருந்தால் அது செல்லாது என சமூக வலைதளங்களில் அண்மைக்காலமாக தகவல்கள் பரவி வருகின்றன.

star in 500 rs note
star in 500 rs note

இந்நிலையில் இதற்கான விளக்கத்தை ரிசர்வ் வங்கி அளித்துள்ளது. அதில், “அச்சிடல் குறைபாடு உள்ளிட்ட காரணங்களால் திரும்பப் பெறப்பட்டு அதற்கு மாற்றாக அச்சிடப்படும் ரூபாய் தாள்களை அடையாளம் காண்பதற்காக நட்சத்திர குறியீடு இடப்பட்டது. அவை மற்ற ரூபாய் தாள்களைப் போலவே செல்லும்” என்று ரிசர்வ் வங்கியின் தலைமை பொது மேலாளர் யோகேஷ் தயாள் தெரிவித்துள்ளார்.

ரூபாய் தாள்களில் வரிசை எண்களுடன் உள்ள நட்சத்திர குறியீடு குறித்து விரிவான விவரங்கள் ரிசர்வ் வங்கி இணையதளத்தில் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com