நுகர்வோர் ‌நம்பிக்கை 5 ஆண்டுகளில் இல்லாத சரிவு: ஆர்பிஐ ஆய்வில் தகவல்

நுகர்வோர் ‌நம்பிக்கை 5 ஆண்டுகளில் இல்லாத சரிவு: ஆர்பிஐ ஆய்வில் தகவல்
நுகர்வோர் ‌நம்பிக்கை 5 ஆண்டுகளில் இல்லாத சரிவு: ஆர்பிஐ ஆய்வில் தகவல்

இந்தியாவில் நுகர்வோர் நம்பிக்கை 5‌ ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குறைந்துள்ளதாக ரிசர்வ் வங்கியின் ஆய்வில் தெரியவந்துள்ளது.

நாட்டில் பரவலாக 13 நகரங்களில் சுமார் 5 ஆயிரத்து 334 குடும்பங்களில் ரிசர்வ் ‌வங்கி, நுகர்வோர் நம்பிக்கையில் தற்போதுள்ள சூழல் குறித்த ஆய்வை மேற்கொண்டிருக்கிறது. அதன்படி, நுகர்வோர் நம்பிக்கை குறியீடு சென்ற நவம்பர் மாதத்தில் 85.7 ஆகக் குறைந்துள்ளதாக ஆய்வுகளில் தெ‌ரியவந்துள்‌ளது. இதுவே முந்தைய செப்டம்பபர் மாதத்தில் நுகர்வோர் நம்பிக்கை குறியீடு 89.4ஆக இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வேலையின்மை அதிகரிப்பு, பொருளாதார மந்தநிலை உள்ளிட்ட காரணங்களால் நுகர்வோர் நம்பிக்கை 2014-ஆம் ஆண்டுக்குப் பிறகு சரிந்துள்ளதாக ரிசர்வ் வங்கி நடத்திய ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. இதுதவிர, வங்கிகள் கடன் வழங்குவதில் விதித்த கடுமையான கட்டுப்பாடுகள், உள்நாட்டு நுகர்வோர் சந்தையை‌ சுமார் 60 சதவிகிதம் பாதித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com