புதுச்சேரி: ரேஷன் கடை ஊழியர்கள் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு

புதுச்சேரியில் ரேஷன் கடை ஊழியர்கள் நிலுவையில் உள்ள ஊதியம் மற்றும் நேரடி பண பரிவர்த்தனை திட்டத்தை ரத்து செய்யக்கோரி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற 100-க்கும் மேற்பட்ட ஊழியர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
புதுச்சேரி: ரேஷன் கடை ஊழியர்கள் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு

புதுச்சேரி மாநிலத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம்தோறும் 20 கிலோ இலவச அரிசி வழங்கப்பட்டு வந்தது.  இதனிடையே கடந்த கால ஆட்சியில் அரிசி கொள்முதல் செய்ததில் ஊழல் நடைபெற்றதாக கூறி கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் ரேஷன் கடைகளில் அரிசி வழங்குவதற்கு பதிலாக அரிசிக்கான பணத்தை பயனாளிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக ரேஷன் கடைகள் மூடப்பட்டுள்ளது.

இதனிடையே புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 550 ரேஷன் கடைகள் மூடப்பட்டதன் காரணமாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு 55 மாதங்களுக்கு மேலாக ஊதியம் வழங்கப்படவில்லை. மேலும், நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்கக்கோரி ஊழியர்கள் பல்வேறு போராட்டஙக்ளில் ஈடுபட்டு வந்தனர். 

இந்நிலையில், நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்க வேண்டும், மூடப்பட்டுள்ள ரேஷன் கடைகளை மீண்டும் திறந்து இலவச அரிசி உள்ளிட்ட பொருட்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 100-க்கும் மேற்பட்ட ரேஷன் கடை ஊழியர்கள் தலைமை தபால் நிலையத்தில் இருந்து ஆளுநர் மாளிகை நோக்கி முற்றுகையிட ஊர்வலமாக வந்தனர். ஆளுநர் மாளிகை அருகே ஊழியர்கள் வந்த போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். மேலும் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி துணைநிலை ஆளுநர் 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com