கோயிலுக்குச் சென்ற பெண்ணைக் கடத்தி கூட்டுப் பாலியல் வன்கொடுமை!

கோயிலுக்குச் சென்ற பெண்ணைக் கடத்தி கூட்டுப் பாலியல் வன்கொடுமை!

கோயிலுக்குச் சென்ற பெண்ணைக் கடத்தி கூட்டுப் பாலியல் வன்கொடுமை!
Published on

உறவினர் மற்றும் நண்பருடன் கோயிலுக்குச் சென்ற இளம் பெண், கடத்தப்பட்டு கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவர், தனது உறவினர் மற்றும் நண்பருடன் கோயிலுக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது மது போதையில் இருந்த 3 பேர், அவர்களை வழிமறித்தனர். இளம் பெண்ணின் உறவினர் மற்றும் நண்பரை சரமாரியாகத் தாக்கினர். இதனால் அவர்கள் தப்பி ஓடினர். பின்னர், அந்த இளம் பெண்ணை அடித்து உதைத்துத் தூக்கிச் சென்றனர். மறைவான இடத்துக்கு கொண்டு சென்று பாலியல் வன்கொடுமை செய்தனர்.

இந்நிலையில் தப்பியோடிய அந்தப் பெண்ணின் உறவினர், அங்கிருந்த மார்க்கெட்டுக்கு சென்றார். கடைக்காரர்களிடம் நடந்த விஷயத்தைக் கூறி, உதவி  கேட்டுள்ளார். யாரும் முன் வரவில்லை. ஒரு கடைகாரர் மட்டும் உதவ முன்வந்தார். 

அந்த இளம் பெண், கடத்தப்பட்டிருந்த இடத்தைக் கண்டுபிடித்து அங்கு சென்றார். அவரைக் கண்டதும் அந்த போதை இளைஞர்கள் தப்பியோடினர். அந்தப் பெண், காப்பாற்ற வந்த கடைக்காரரும் தன்னை பாலியல் வன்கொடுமை செய்துவிடு வாரோ என்ற பயத்தில், தனது உடைகளை கூட எடுக்காமல் நிர்வாணமாகவே அரை கி.மீ தூரம் வரை தப்பி ஓடியுள்ளார்.  அவரைப் பின் தொடர்ந்து சென்ற கடைக்காரர், ’பயப்பட வேண்டாம், காப்பாற்றத்தான் வந்தேன்’ என்று கூறியதை அடுத்து, அந்தப் பெண் நின்றார். தனது ஆடைகளை கொடுத்து அணிந்து கொள்ள சொன்ன அவர், பின்னர் போலீசுக்கு தகவல் கொடுத் தார்.

போலீசார் வழக்குப் பதிவு செய்து சம்பவ இடத்துக்குச் சென்றனர். அங்கு உடைந்த வளையல்கள், மது பாட்டில்கள், சிந்திக் கிடந்த ரத்தக்கறைகளைக் கண்டதாகவும் அதை சேகரித்துள்ளதாகவும் அந்தப் பகுதி டிஎஸ்பி, பரத்சிங் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com