திலீப்பிடம் பாவனா பலாத்கார வீடியோ: போலீஸ் தகவல்
நடிகை பாவனாவை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வீடியோ, நடிகர் திலீப்பிடம் கொடுக்கப்பட்டதாக
கேரள போலீஸ் தெரிவித்துள்ளது.
பிரபல நடிகை பாவனாவை கடத்தி பாலியல் வன்முறை செய்யப்பட்ட வழக்கில் மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கும், ஏற்கனவே இந்த வழக்கில் கைதான பல்சர் சுனிலுக்கும் இடையே இருந்த தொடர்பு குறித்து கொச்சி போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல் வெளியாகி இருக்கிறது.
திலீப்பை 2 நாள் காவலில் எடுத்துள்ள போலீசார், ஆதாரங்களை திரட்ட திரிச்சூர் உள்ளிட்ட இடங்களுக்கு அவரை அழைத்துச் சென்று விசாரித்தனர். இதற்கிடையே, நடிகை பாவனாவை கடத்தில் பாலியல் வன்முறை செய்து எடுக்கப்பட்ட வீடியோவை திலீப்பிடம் பல்சர் சுனில் கொடுத்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். வீடியோவை கொடுத்தப் பிறகு தருவதாகச் சொன்ன பணத்தை திலீப் கொடுக்காததால் பிரச்சனை ஏற்பட்டு பல்சர் சுனில் விவகாரத்தை வெளியே கசியவிட்டதாகவும் கூறப்படுகிறது.இந்நிலையில் திலீப்பின் போலீஸ் காவல் இன்றுடன் முடிவடைகிறது.

