முன்னாள் பேராயர் ஃபிராங்கோவிற்கு நிபந்தனை ஜாமீன்
கேரளாவில் கன்னியாஸ்திரி பாலியல் புகார் தொடர்பாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பேராயர் ஃபிராங்கோ முல்லக்கலுக்கு கேரள உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.
கேரள மாநிலம் கோட்டயம் கத்தோலிக்க திருச்சபையின் பேராயராக இருந்த ஃபிராங்கோ, கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக கன்னியாஸ்திரி ஒருவர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வரும்போது ஃபிராங்கோவை பதவி நீக்கம் செய்து கத்தோலிக்க திருச்சபையின் வாடிக்கன் தலைமையகம் உத்தரவிட்டது.
Read Also -> நீதிபதி மனைவியை காவலர் சுட்டுக்கொன்றது ஏன்?
இதனையடுத்து கடந்த மாதம் 22-ஆம் தேதி காவல்துறையினர் ஃபிராங்கோவை கைது செய்தனர். பினனர் கோட்டயம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனையடுத்து ஜாமீன் கேட்டு கேரள உயர்நீதிமன்றத்தை நாடினார் ஃபிராங்கோ. ஆனால் அவரின் ஜாமீன் மனுவை கடந்த 3-ஆம் கேரள உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதனையடுத்து ஃபிராங்கோ மீண்டும் ஜாமீன் கோரிய நிலையில் அவருக்கு நிபந்தனையுடன் கேரள உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. அதாவது கேரளாவிற்குள் நுழையக் கூடாது என்ற நிபந்தனையுடன் ஃபிராங்கோவிற்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.