\
சிறைக் கைதி எடுத்த விபரீத முடிவு - சக கைதிகள் அதிர்ச்சி

சிறைக் கைதி எடுத்த விபரீத முடிவு - சக கைதிகள் அதிர்ச்சி

சிறைக் கைதி எடுத்த விபரீத முடிவு - சக கைதிகள் அதிர்ச்சி
Published on

தனது சொந்த மகளை பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி, தனது பிறப்புறுப்பை தானே அறுத்து எறிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கேரளா, இடுக்கி, வண்டிபெரியார் பகுதியை சேர்ந்த 42 வயது தந்தை ஒருவர் தனது சொந்த மகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் பீர்மேடு சிறைச்சாலையில் போஸ்கோ சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டிருந்தார். 

செவ்வாய்கிழமை தோறும் கைதிகள் தங்களை முகச்சவரம் செய்து கொள்வதற்கு சிறை அதிகாரிகள் பிளேடு கொடுப்பது வழக்கம். அதே போல் நேற்றும் அதிகாரிகள் கைதிகளிடம் பிளேடு கொடுத்துள்ளனர். 

அப்போது, போஸ்கோ சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டிருந்த கைதி திடீரென பிளேடை வைத்து தனது  பிறப்புறுப்பை தானே அறுத்து சிறை வளாகத்திற்கு வெளியே எறிந்துள்ளார். 

இதைப்பார்த்த மற்ற கைதிகள் சிறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து வந்த அதிகாரிகள் கைதியை மீட்டு உடனடியாக மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்து அவரின் உயிரை காப்பாற்றினர். 

இதுகுறித்து போலீஸ் தரப்பு கூறுகையில், சில நாட்களுக்கு முன்பு தன்னை யாரோ இந்த வழக்கில் சிக்க வைக்க பார்ப்பதாக சக கைதிகளிடம் அவர் கூறியுள்ளதாகவும் குற்ற மனப்பான்மையால் இதுபோன்ற செயலில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாக தெரிவித்துள்ளனர். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com