மும்பையில் பலகோடி வர்த்தகத்தைப் பாதித்த வைரஸ்

மும்பையில் பலகோடி வர்த்தகத்தைப் பாதித்த வைரஸ்
மும்பையில் பலகோடி வர்த்தகத்தைப் பாதித்த வைரஸ்
Published on

உலகையே அச்சுறுத்திய 'ரான்சம்வேர் வான்னாக்ரை' வைரஸ் மும்பையில் பல கோடி ரூபாய் வர்த்தகத்தைப் பாதித்துள்ளது. 

கடந்த மே மாதம் உலகில் உள்ள கம்ப்யூட்டரை எல்லாம் உலுக்கிய 'ரான்சம்வேர் வான்னாக்ரை' இன்று இந்தியாவில் தனது தாக்குதலை நடத்தியுள்ளது. நாட்டின் மிகப்பெரிய துறைமுகமான மும்பை ஜவஹர்லால் நேரு துறைமுகத்தில் ஏற்றுமதி, இறக்குமதி பணிகள் மேற்கொள்ளப்பட்டுவந்த கணினிகள் முழுமையாக முடக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக மும்பை துறைமுகத்தில், பல டன் கணக்கிலான சரக்குகள் தேக்கமடைந்து, பலகோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. 

கடந்த மே மாதம் பரவிய 'ரான்சம்வேர் வான்னாக்ரை' வைரசால், 150 நாடுகளில் 'விண்டோஸ் எக்ஸ்.பி' இயங்குதளத்தில் செயல்படும் 2,30,000 கம்ப்யூட்டர்களில் உள்ள தரவுகள் அழிக்கப்பட்டன. ரஷ்யாவில் உள்ள பிரபல ஆயில் நிறுவனம், மின் துறை அலுவலகங்கள், டென்மார்க்கின் கப்பல் நிறுவனம், உக்ரைன் சென்ட்ரல் வங்கி, விமான நிலையம் மற்றும் அரசு அலுவலக கணினிகள் ஆகிய இடங்களில் உள்ள 3 லட்சத்துக்கும் மேற்பட்ட கணினிகளை ஹேக் செய்து அதில் உள்ள தரவுகள் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியானது. ஐரோப்பாவில் கண்டறியப்பட்ட 'வான்னாக்ரை' வைரஸ் உக்ரைன், ரஷ்யா மற்றும் டென்மார்க் உள்ளிட்ட நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. 

இன்று காலை உக்ரைன் நாட்டில் பெட்யா என்ற புதிய வைரஸ் தலைகாட்டி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில், உக்ரைன் அரசு அலுவலகங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இந்த தாக்குதலுக்கு 'Petya' சைபர் தாக்குதல் என்று பெயரிடப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com