அயோத்தியில் கோயில்: தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்!

அயோத்தியில் கோயில்: தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்!
அயோத்தியில் கோயில்: தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்!

அயோத்தியில் ராமர் கோயில் கட்டலாம் என உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ‘அயோத்தி வழக்கில் தீர்ப்பு வாசிக்கப்படுகிறது. அனைவரும் அமைதியாக இருக்க வேண்டும்’ என கூறி தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தீர்ப்பை வாசிக்க தொடங்கினார். இந்த தீர்ப்பில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் கூறிய முக்கிய அம்சங்கள்.

  • வழக்கில் 5 நீதிபதிகளும் ஒரே தீர்ப்பை வெளியிடுகிறோம்
  • அரசியலுக்கு அப்பாற்பட்டு சட்டம் நிலை நாட்டப்பட வேண்டும் 
  • சன்னி பிரிவுக்கு எதிராக வக்ஃபு வாரியம் தாக்கல் செய்த மனு தள்ளுபடி 
  • மசூதியில் 1949-ம் ஆண்டில் சிலைகள் வைக்கப்பட்டன 
  • இறையியல் விவகாரங்களில் நீதிமன்றம் தலையிடுவது சரியானதல்ல
  • ஒரு பிரிவினரின் நம்பிக்கையை மறு பிரிவினர் மறுக்க முடியாது
  • மதச்சார்பின்மையே அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை; அதன்படியே உச்சநீதிமன்றம் அமைக்கப்பட்டது 
  • பாபர் மசூதி வெற்றிடத்தில் கட்டப்படவில்லை என்பதை தொல்லியல் துறை ஆதாரங்கள் நிரூபிக்கின்றன; தொல்லியல் துறை ஆதாரங்களை புறக்கணிக்க முடியாது
  • அமைதியை காக்கவும், பாதுகாப்பை பராமரிக்கும் வகையிலும் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும்
  • மதச்சார்பின்மையே அரசியல் சாசனத்தின் அடிப்படை மாண்பு 
  • மசூதிக்கு கீழே கண்டறியப்பட்ட கட்டுமானங்கள், இஸ்லாமியர்களின் கட்டுமானங்கள் அல்ல
  • அயோத்தி தான் ராமர் பிறந்த இடம் என்பதை இந்துக்கள் நம்புகிறார்கள்; அதே இடத்தை பாபர் மசூதி என்று இஸ்லாமியர்கள் அழைக்கிறார்கள்
  • நிலத்தின் உரிமையை நம்பிக்கையின் அடிப்படையில் முடிவு செய்ய முடியாது
  • அயோத்தியில் இஸ்லாமியர்களுக்கு 5 ஏக்கர் மாற்று இடம் கொடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
  • அயோத்தியின் 2.77 ஏக்கர் நிலத்தை மூன்று பங்காக பிரித்துக்கொடுத்தது அலகாபாத் நீதிமன்றம் செய்த தவறு
  • அயோத்தியில் ராமர் கோயில் கட்டலாம் அனுமதி; சர்ச்சைக்குரிய இடத்தில் கோயில் கட்டுவதற்கான அமைப்பை 3 மாதங்களுக்குள் உருவாக்க வேண்டும்
  • வக்ஃபு போர்டு ஏற்கும் இடத்தில் 5 ஏக்கர் நிலம் தர மத்திய அரசு, உத்தரப் பிரதேச அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com