தலைமை நீதிபதியாகிறார் ர‌ஞ்சன் கோகாய் : கொலிஜியத்தில் மாற்றம்

தலைமை நீதிபதியாகிறார் ர‌ஞ்சன் கோகாய் : கொலிஜியத்தில் மாற்றம்
தலைமை நீதிபதியாகிறார் ர‌ஞ்சன் கோகாய் : கொலிஜியத்தில் மாற்றம்
Published on

உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் பதவியேற்பது உறுதியாகியுள்ளது. 


உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியான தீபக் மிஸ்ரா அடுத்த மாதம் 2ம் தேதி ஓய்வு பெற உள்ள நிலையில், பணிமூப்பு அடிப்படையில் அவருக்கு அடுத்த நிலையில் உள்ள ரஞ்சன் கோகாய் தலைமை நீதிபதி ஆக பதவி ஏற்கிறார். புதிய தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாயை, தற்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா சட்ட அமைச்சகத்திடம் முறைப்படி அளித்துள்ளார். 

ரஞ்சன் கோகாய் அடுத்தாண்டு நவம்பர் மாதம் வரை பதவியில் இருப்பார். அசாம் மாநிலத்தை சேர்ந்த ரஞ்சன் கோகாய் அம்மாநில முன்னாள் முதலமைச்சர் கேஷப் சந்திர அசாமில் இருந்து வந்த ரஞ்சன்ன் மகன் ஆவர். மேலும் வடகிழக்கு மாநிலங்களில் இருந்து வரும் முதல் தலைமை நீதிபதி கோகாய் தான்.

ரஞ்சன் கோகாயியின் சட்டபூர்வ பயணம் 1978 ஆம் ஆண்டு கௌஹதி உயர்நீதிமன்றத்தில் தொடங்கினார். அசாம் மாநிலத்தில் இருந்து வந்த ரஞ்சன் கோகாய் சட்டத்தரணிகளுக்கு 'சட்ட காப்பாளர்' ஆக அறியப்படுகிறார். உச்சநீதி மன்றத்தால் கண்காணிக்கப்படும் குடிமக்கள் தேசிய பதிவேடு (NRC), சர்ச்சைக்குரிய பிரச்னை பற்றி கேட்டபோது, கோஜியின் சொந்த மாநிலமான அசாமில் இவருடன் பணிபுரிந்தவர்கள் இவரை மென்மையான பேசுபவர் ஆனால் கடுமையான நீதிபதி என நினைவு கூர்ந்துள்ளனர். பஞ்சாப், ஹரியானா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த கோகாய், 2012ல் உச்ச நீதிமன்ற நீதிபதி ஆனார். 40 ஆண்டுகளாக சட்டம் காத்த இவர், தற்போது தலைமை நீதிபதியாக பதவி ஏற்கிறார்.

மேலும் கொலிஜியத்தில் மாற்றம் ஏற்படவுள்ளது. அதன்படி கொலிஜியத்திற்கு ரஞ்சன் கோகாய் தலைமை வகிப்பார். உச்சநீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகளாக உள்ள மதன் பி லோகூர், குரியன் ஜோசப், ஏ.கே.சிக்ரி, எஸ்.ஏ.பாப்டே ஆகியோரும் கொலிஜியத்தில் இடம்பெறுவர். இவர்களில் நீதிபதி எஸ்.ஏ.பாப்டேவை தவிர மற்ற அனைவரும் தற்போதைய கொலிஜியத்தில் ஏற்கனவே உள்ளனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com