அக்டோபர் மாதம் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாகிறார் ரஞ்ஜன் கோகாய்
உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக ரஞ்ஜன் கோகாயை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக தற்போது தீபக் மிஸ்ரா உள்ளார். இவரது பதவிக்காலம் வரும் அக்டோபர் 2ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால் அடுத்த தலைமை நீதிபதியாக ரஞ்ஜன் கோகாயை தீபக் மிஸ்ரா பரிந்துரை செய்தார். ஏனென்றால் பணி மூப்பின்படி, தீபக் மிஸ்ராவுக்கு அடுத்த நிலையில் இருப்பவர் ரஞ்ஜன்தான். தீபக் மிஸ்ராவின் பரிந்துரையைத் தொடர்ந்து தற்போது ரஞ்ஜனை தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த உத்தரவின் படி, வரும் அக்டோபர் 3ஆம் தேதி ரஞ்ஜன் கோகாய் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பெற்கவுள்ளார். அவருக்கு குடியரசுத்தலைவர் பதவிப்பிரமானம் செய்து வைக்கவுள்ளார். பதவியேற்கும் கோகாய் அடுத்த ஆண்டு நவம்பர் 17ஆம் தேதி வரை பதவி வகிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.