புதுச்சேரி முதல்வராக நான்காவது முறை பதவியேற்றார் என்.ரங்கசாமி!

புதுச்சேரி முதல்வராக நான்காவது முறை பதவியேற்றார் என்.ரங்கசாமி!

புதுச்சேரி முதல்வராக நான்காவது முறை பதவியேற்றார் என்.ரங்கசாமி!
Published on

புதுச்சேரி முதல்வராக 4 ஆவது முறையாக என்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவர் என்.ரங்கசாமி இன்று பதவியேற்றார். அவருக்கு துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

காந்தி திடலுக்குப் பதில் ஆளுநர் மாளிகையில் எளிமையான முறையில் பதவியேற்பு விழா நடைபெற்றது. 4 ஆவது முறையாக முதல்வராகும் ரங்கசாமிக்கு ஆளுநர் தமிழிசை பதவிப்பிரணாமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். பதவியேற்பு விழாவில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் ஆகியோர் பங்கேற்றனர்.

புதுச்சேரி முதல்வராக பொறுப்பேற்ற என்.ரங்கசாமிக்கு கன்னியாகுமரி மக்களவை காங்கிரஸ் எம்பி விஜய் வசந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com