பணம் வசூலித்து கார்: கேரள எம்.பி. ரம்யா ஹரிதாஸ் மறுப்பு

பணம் வசூலித்து கார்: கேரள எம்.பி. ரம்யா ஹரிதாஸ் மறுப்பு
பணம் வசூலித்து கார்: கேரள எம்.பி. ரம்யா ஹரிதாஸ் மறுப்பு

கேரள இளம் எம்.பி. ரம்யா ஹரிதாஸுக்கு, பணம் வசூலித்து கார் வழங்க, இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் முன் வந்ததை ஏற்க அவர் மறுத்துவிட்டார்.

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் ஆலத்தூர் தொகுதி மக்களவை எம்.பி, ரம்யா ஹரிதாஸ். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோட்டையான, இத் தொகுதியில், 36 வருடங்களாக வேறு கட்சியினர் வெற்றி பெற்றதில்லை. கடந்த நாடாளு மன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் இங்கு போட்டியிட்ட, ரம்யா ஹரிதாஸ் அபார வெற்றி பெற்றார். பட்டியலினத் தைச் சேர்ந்த ரம்யாவின் வெற்றி இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. சமீபத்தில் ரம்யா, தான் எம்.பி என்பதை மறந் து, தன் நிலத்தில் நாற்று நட்டார். டிராக்டர் ஓட்டி நிலத்தை உழுதார். அப்போது, பப்ளிசிட்டிக்காக இப்படி செய்கிறார் என்று சமூக வலைத்தளங்களில் கூறப்பட்டது.

இந்நிலையில், ஆலத்தூர் தொகுதியைச் சேர்ந்த இளைஞர் காங்கிரஸ் பிரிவினர் ரம்யாவுக்காக வாங்கிக் கொடுக்க முடிவு செய்தனர். கட்சியினர் தங்களால் முடிந்த பணத்தை கொடுத்தும் பணம் வசூல் செய்தும் அவருக்காக ரூ.14 லட்சத்தில் கார் புக் செய்தனர். இந்நிலையில், சமூக வலைதளங்களில் இதற்கு எதிர்ப்பு கிளம்பியது.

``ரம்யாவின் சம்பளம் மட்டுமே ரூ.2 லட்சம் வரும். இதுபோக, படிகள் இருக்கிறது. எம்.பி என்றால் வட்டி இல்லாமல் லோன் கொடுப்பார்கள். அப்படியிருக்கும் போது இப்படி வசூல் செய்து கார் கொடுக்க வேண்டுமா?’’ பலர் கேள்வி எழுப்பினர். 

அதற்கு பதிலளித்த இளைஞர் காங்கிரஸ் பிரிவினர், ‘’எம்.பி என்பதால் பல்வேறு இடங்களுக்குச் செல்ல வேண்டியிருக்கிறது. அதனால், வாங்கிக் கொடுக்கிறோம். இதில் என்ன தவறு இருக்கிறது?’’ என்று கூறியிருந்தனர்.

இதற்கிடையே கேரள மாநில காங்கிரஸ் தலைவர், முல்லப்பள்ளி ராமச்சந்திரன், ‘’எம்.பிக்களுக்கு எளிதாக லோன் கிடைக் கும் போது, பணம் வசூல் செய்து கார் வாங்கிக் கொடுப்பது சரியானதல்ல, நானாக இருந்தால் அதை ஏற்றுக்கொள்ள மாட் டேன்’’ என்று கூறியிருந்தார். 

இந்நிலையில், பணம் வசூல் செய்து தனக்கு கார் வாங்க வேண்டாம் என்றும் அதை ஏற்கபோவதில்லை என்றும் ரம்யா ஹரி தாஸ் தெரிவித்துள்ளார்.  இதுபற்றி தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ள அவர், ‘’கட்சிதான் என்னை எம்.பியாக்கி இருக்கி றது. அதனால், கட்சி தலைமை என்ன சொல்கிறதோ அதை கடைசி மூச்சு உள்ளவரை ஏற்பேன்’’ என்று கூறியுள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com