‘காங். உடனான கூட்டணியை ஏற்க முடியாது’: சிவசேனா நிர்வாகி ராஜினாமா

‘காங். உடனான கூட்டணியை ஏற்க முடியாது’: சிவசேனா நிர்வாகி ராஜினாமா
‘காங். உடனான கூட்டணியை ஏற்க முடியாது’: சிவசேனா நிர்வாகி ராஜினாமா

காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி ஆட்சியமைப்பதை ஏற்க முடியாது எனக் கூறி சிவசேனா கட்சியின் இளைஞர் அமைப்பை சேர்ந்த நிர்வாகி ஒருவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். 

மகாராஷ்டிராவில் சிவசேனா,காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் தற்போது ஆட்சியமைக்க உரிமை கோரியுள்ளனர். இதில் முதலமைச்சராக சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்ரே தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்தச் சூழலில் சிவசேனா கட்சியின் இளைஞர் அமைப்பு நிர்வாகி ரமேஷ் சோலான்கி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “1992ஆம் ஆண்டு என்னுடைய 12ஆவது வயதில்  பாலாசாஹேப் தாக்ரே சிவசேனா கட்சியின் தலைவராக இருந்த போது நான் சிவசேனா கட்சியில் இணைந்தேன். அப்போது இருந்து கடந்த 21ஆண்டுகளாக சிவசேனா கட்சிக்காக தீவிரமாக உழைத்தேன். தற்போது ஆட்சியமைக்க சிவசேனா கட்சி காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி அமைக்க திட்டமிட்டுள்ளது. இந்தச் சமயத்தில் மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியிலிருந்து முதலமைச்சர் வரவுள்ளது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. 

ஆனாலும் ஒருநாளும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்க என்னுடைய மனம் இடம் கொடுக்கவில்லை. ஆகவே என்னுடைய கட்சிப் பதவியை ராஜினாமா செய்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com