`அவங்களின் அப்பாவால்கூட என்னை கைது செய்ய முடியாது' - மீண்டும் சர்ச்சையில் பாபா ராம்தேவ்

`அவங்களின் அப்பாவால்கூட என்னை கைது செய்ய முடியாது' - மீண்டும் சர்ச்சையில் பாபா ராம்தேவ்
`அவங்களின் அப்பாவால்கூட என்னை கைது செய்ய முடியாது' - மீண்டும் சர்ச்சையில் பாபா ராம்தேவ்

இந்திய மருத்துவ சங்கம் (IMA) பிரபல பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவ்வுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய விவகாரத்தில் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் அவர் பேசியுள்ள வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது.

யோகா குரு பாபா ராம்தேவ் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று அலோபதி மருத்துவம் குறித்தும் கொரோனா தடுப்பூசி குறித்தும் பேசிய வீடியோ சர்ச்சைக்குள்ளானது. அவரது பேச்சுக்கு இந்திய மருத்துவக் சங்கம் (ஐஎம்ஏ) கடும் கண்டனம் தெரிவித்து, மத்திய அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தது. இதைத்தொடர்ந்து பாபா ராம்தேவ் தனது கருத்தைத் திரும்பப் பெற்று, தான் பேசியதற்கு வருத்தம் தெரிவித்தார்.

எனினும், இந்த விவகாரத்தில் இந்திய மருத்துவ சங்கம் (IMA) ராம்தேவ்வுக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. அந்த நோட்டீஸில் 15 நாட்களுக்குள் பாபா ராம்தேவ் மன்னிப்பு கேட்கவேண்டும். மற்றும் 1000 கோடி ரூபாய் இழப்பீடு தர வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மேலும், பதஞ்சலி நிறுவனம் மீதும் ராம்தேவ் மீதும் மருத்துவ சங்கம் மூலம் குற்றவியல் வழக்கு தாக்கல் செய்யப்படும் என்று அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்த சங்கம் விரிவாக கடிதம் எழுதியுள்ளது.

மேலும் டெல்லி காவல்நிலையத்தில் தற்போது பாபா ராம்தேவ் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த சர்ச்சைகளுக்கு மத்தியில், சமூக ஊடகங்களில் பாபா ராம்தேவ் பேசும் மற்றொரு சர்ச்சைக்குரிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் தன்னை கைது செய்வது தொடர்பான கேள்விகளுக்கு ``அவர்களின் தந்தையால் கூட என்னை கைது செய்ய முடியாது. அவர்கள் சும்மா சத்தம் போடுகிறார்கள். அவர்கள் அனைவரும் தக் ராம்தேவ், மகாதக் ராம்தேவ், கிராப்டர் ராம்தேவ் போன்ற ட்ரெண்ட்களை உருவாக்கிக்கொண்டே இருக்கிறார்கள்" என்று பேசியிருக்கிறார். இது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக பேசியுள்ள டெஹ்ராடூனைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர், ``ராம்தேவின் பேச்சும், அவரின் அறிக்கையும் ஆணவம் நிறைந்தது. அவர் தன்னை சட்டத்திற்கு மேலே கருதுகிறார் என்பதை இது காட்டுகிறது" என்றுளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com