\
“4 மாதங்களில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும்''- அமித் ஷா

“4 மாதங்களில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும்''- அமித் ஷா

“4 மாதங்களில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும்''- அமித் ஷா
Published on

அயோத்தியில் அடுத்த 4 மாதங்களில் வானுயர்ந்த ராமர் கோயில் கட்டப்படும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்காக பக்குர் என்ற இடத்தில் நடைபெற்ற பாரதிய ஜனதாவின் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் அமித் ஷா கலந்து கொண்டார். அதில் பேசிய அவர், அயோத்தி விவகாரத்தில் தற்போது உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கியிருப்பதாக தெரிவித்தார். அடுத்தபடியாக 4 மாதங்களுக்குள் வானுயர்ந்த அளவில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டலாம் என்றும் இதற்கு பதில் இஸ்லாமியர்களுக்கு 5 ஏக்கர் நிலம் தரப்பட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கடந்த நவம்பர் 9-ம் தேதி தீர்ப்பளித்திருந்தது. மேலும், இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்களையும் உச்சநீதிமன்ற அமர்வு தள்ளுபடி செய்தது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com