\
எந்த பாதையில் சேது சமுத்திர திட்டம்: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

எந்த பாதையில் சேது சமுத்திர திட்டம்: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

எந்த பாதையில் சேது சமுத்திர திட்டம்: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி
Published on

ராமர் பாலத்தை இடிக்காமல் மாற்றுப் பாதையில் சேதுசமுத்திர திட்டத்தை அமல்படுத்தக் கோரிய வழக்கில் மத்திய அரசு 6 வாரத்தில் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி இந்த வழக்கை தொடர்ந்தனர். 2013-ம் ஆண்டில் இருந்து இந்த வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. ராமர் பாலத்தை தேசிய நினைவு சின்னமாக அறிவித்து, பாலம் அமைந்துள்ள பகுதியில் சேது சமு‌த்‌திர கால்வாய் திட்டம் செயல்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று சுப்பிரமணிய சாமி தொடர்ந்த வழக்கு மீது இன்று விசாரணை நடைபெற்றது.

அப்போது,  உரிய அவகாசம் அளித்தும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று சுப்ரமணியன் சுவாமி புகார் தெரிவித்தார். மேலும், எந்தெந்த வழியில் நிறைவேற்றப்போகிறார்கள் என்பது குறித்து மத்திய அரசு எந்த முடிவும் எடுக்காமல் இருந்து வருகிறது என்று அவர் கூறினார். 

இதனையடுத்து, சேது சமுத்திர திட்டம் குறித்த தங்களது நிலைப்பாடு குறித்து மத்திய அரசு 6 வாரத்தில் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com