ராமர் பாலத்தில் ஆய்வு நடத்தப் போவதாக இந்திய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சில் அறிவித்துள்ளது.
ராமர் பாலம் இயற்கையாக உருவானதா இல்லை மனிதனால் உருவாக்கப்பட்டதா என ஆய்வு மேற்கொள்ள, இந்திய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சில் திட்டமிட்டுள்ளது. டெல்லியில் பேசிய அதன் தலைவர் சுதர்சன ராவ் ராமர் பாலம் இயற்கையாக உருவானதா, மனிதனால் உருவாக்கப்பட்டதா என்பதே ஆய்வின் நோக்கம் என்றார். ராமர் பாலம் குறித்து இதிகாசங்களில் கூறப்படும் தகவல்களுடன் ஒப்பிடும் நோக்கம் இல்லை என்றும், அகழ்வாராய்ச்சி நோக்கத்திலேயே இம்முயற்சியில் இறங்கியுள்ளதாக அவர் கூறினார்.