’ஓம் ஸ்ரீராம்’ என 21 முறை எழுதிவிட்டுப் பொறுப்பேற்ற மத்திய அமைச்சர்.. #ViralVideo

விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்பதற்கு முன்பாக ’ஓம் ஸ்ரீராம்’ என 21 முறை எழுதிவிட்டு கிஞ்சராபு ராம்மோகன் நாயுடு பொறுப்பேற்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கிஞ்சராபு ராம்மோகன் நாயுடு
கிஞ்சராபு ராம்மோகன் நாயுடு எக்ஸ் தளம்

18வது மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்குத் தனிப் பெரும்பான்மை கிடைக்காததால், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் மீண்டும் ஆட்சி அமைத்துள்ளது. அதாவது, பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகளின் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் பாஜக ஆட்சி அமைந்துள்ளது. இதையடுத்து, பிரதமராக நரேந்திர மோடி, மூன்றாவது முறையாகப் பதவியேற்றுக் கொண்டார். அவரைத் தொடர்ந்து 30 கேபினெட் அமைச்சர்கள், 5 தனிப்பொறுப்புடன் கூடிய அமைச்சர்கள் மற்றும் 36 இணை அமைச்சர்கள் என 71 பேர் பதவியேற்றனர். அதில், ஆந்திர மாநில தெலுங்கு தேச கட்சியின் கிஞ்சராபு ராம்மோகன் நாயுடுவும், மத்திய அமைச்சராகப் பதவியேற்றார். பின்னர் ஜூன் 10ஆம் தேதி வெளியான துறைகள் குறித்த ஒதுக்கீட்டில், கிஞ்சராபு ராம்மோகன் நாயுடுவுக்கு விமானப் போக்குவரத்துத் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்த நிலையில், கிஞ்சராபு ராம்மோகன் நாயுடு, விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்பதற்கு முன்பாக ’ஓம் ஸ்ரீராம்’ என 21 முறை எழுதிவிட்டு, அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

இதையும் படிக்க: சிக்கிம்| நேற்று எம்.எல்.ஏவாக பதவியேற்பு.. இன்று ராஜினாமா.. முதல்வர் மனைவி அதிரடி!

கிஞ்சராபு ராம்மோகன் நாயுடு
மத்தியஅமைச்சரவை பட்டியல்|யார் யாருக்கு எந்தெந்த துறைகள் ஒதுக்கீடு? வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com