அயோத்தியில் ராமர் கோயில், லக்னோவில் மசூதி: வக்பு வாரியம் யோசனை

அயோத்தியில் ராமர் கோயில், லக்னோவில் மசூதி: வக்பு வாரியம் யோசனை

அயோத்தியில் ராமர் கோயில், லக்னோவில் மசூதி: வக்பு வாரியம் யோசனை
Published on

அயோத்தியில் ராமர் கோயில் கட்டிக்கொள்ளலாம் என மத்திய ஷியா வக்பு வாரியம் யோசனை தெரிவித்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய ராம ஜென்ம பூமி - பாபர் மசூதி இடத்தில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பான பிரச்சினை பல ஆண்டுகளாக உள்ளது. இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் உள்ளது. இந்தப் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணவேண்டும் என்று உச்சநீதிமன்றம் யோசனை தெரிவித்தது. பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் நடந்து வருகின்றன. இதையடுத்து இந்த வழக்கில் அடுத்த நகர்வாக, ஷியா வக்பு வாரியம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டிக்கொள்ளும் யோசனையை தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக, ஷியா முஸ்லிம் வக்பு வாரிய தலைவர் சையத் வாஷிம் ரிஸ்வி கூறும்போது, ’பல்வேறு தரப்பிடமும் ஆலோசித்த பின் அயோத்தியில் ராமர் கோவிலை கட்டிக்கொள்ளலாம், பாபர் மசூதியை, லக்னோவில் கட்ட வேண்டும் என்ற திட்டத்துக்கு தயாராகி உள்ளோம். அமைதி மற்றும் சகோதரத்தை உறுதிசெய்யும் தீர்வாக இந்த திட்டம் அமையும் என்று நம்புகிறோம்’ என கூறிஉள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com