வழக்கறிஞர் பணியிலிருந்த ஓய்வு - ராம்ஜெத்மலானி அறிவிப்பு
வழக்கறிஞர் பணியில் இருந்து ஓய்வு பெற போவதாக பிரபல மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி அறிவித்துள்ளார்.
டெல்லியில் இந்திய பார் கவுன்சில் சார்பில் புதியதாக உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி ஏற்றுக்கொண்ட தீபக் மிஸ்ராவுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள், நீதிபதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் பங்கேற்ற பிரபல மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி கூறியதாவது, "வழக்கறிஞர் பணியில் இருந்து ஓய்வு பெறுவது என முடிவு செய்துள்ளேன். 70 ஆண்டுகளாக வழக்கறிஞராக பணியாற்றி வந்துள்ளேன். உயிருடன் இருக்கும் வரை புதிய பணியில் ஈடுபடுவேன். ஊழல் அரசியல்வாதிகளை எதிர்த்து போராடுவேன். முந்தைய மத்திய அரசும், தற்போது உள்ள மத்திய அரசும் நாட்டை மிகவும் இக்கட்டான நிலைக்கு செல்ல வைத்து விட்டன. இந்த பேரழிவில் இருந்து நாட்டை காப்பாற்றுவது வழக்கறிஞர்கள் மற்றும் குடிமகன்களின் கடமை." எனக்கூறினார்.