புதுச்சேரியில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு சார்பில் பேரணி - அமைச்சர் நமச்சிவாயம் பங்கேற்பு

புதுச்சேரியில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு ஊர்வலத்தில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தலைமையில் 500-க்கும் மேற்பட்டோர் சீருடையில் அணிவகுத்து வந்தனர்.
RSS
RSSpt desk

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் 99வது ஆண்டு துவக்க நாளையொட்டியும், வள்ளலாரின் 200 ஆம் ஆண்டு நிறைவு விழா சுவாமி விவேகானந்தர் மற்றும் அம்பேத்காரின் தேசிய சிந்தனைகளை நினைவூட்டம் வகையில் முப்பெரும் விழாவாக கொண்டாட புதுச்சேரி மாநில ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

RSS march
RSS marchpt desk

அதன்படி வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் கோயிலில் இருந்து புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தலைமையில் 500க்கும் மேற்பட்ட ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் சீருடையில் மிடுக்கான நடைபோட்டு 3 கி.மீட்டர் தூரமுள்ள புதுச்சேரி கடலூர் சாலையில் அமைக்கப்பட்டிருந்த பொதுக்கூட்ட மேடைக்கு வந்து சேர்ந்தனர்.

முன்னதாக பாஜக மாநில தலைவர் செல்வகணபதி எம்.பி கொடியசைத்து துவக்கி வைத்த இந்த ஊர்வலத்தில் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் பங்கேற்றனர். இதன் பின்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com