இந்தியா
உ.பி. உள்ளிட்ட 5 மாநில தேர்தல் பரப்புரை - பேரணி, வாகன ஊர்வலக் கட்டுப்பாடு நீட்டிப்பு
உ.பி. உள்ளிட்ட 5 மாநில தேர்தல் பரப்புரை - பேரணி, வாகன ஊர்வலக் கட்டுப்பாடு நீட்டிப்பு
ஐந்து மாநில தேர்தலில் பேரணிகள், வாகன ஊர்வலங்கள் நடத்துவதற்கான தடையை தேர்தல் ஆணையம் நீட்டித்துள்ளது.
வீடு வீடாகச் சென்று பரப்புரை செய்வதற்கான மொத்த நபர்களின் எண்ணிக்கை 20 பேராக நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை பரப்புரை செய்ய விதிக்கப்பட்ட தடையும் தொடரும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
உள்ளரங்குகளில் அனுமதிக்கான மொத்த எண்ணிக்கையில் 50 சதவிகிதம் பேர் இடம்பெறலாம், மைதானங்களில் நடத்தப்படும் கூட்டங்களில் 500 பேராக இருந்த அனுமதி, ஆயிரம் பேராக தளர்த்தப்படுவதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. கொரோனா பரவலைத் தடுக்க வழிகாட்டு நெறிமுறைகளை அரசியல் கட்சிகள் பின்பற்றவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.