ராக்கி கட்டியதால் லிம்கா புத்தகத்தில் இடம்பிடித்த ம.பி. அமைச்சர்

ராக்கி கட்டியதால் லிம்கா புத்தகத்தில் இடம்பிடித்த ம.பி. அமைச்சர்

ராக்கி கட்டியதால் லிம்கா புத்தகத்தில் இடம்பிடித்த ம.பி. அமைச்சர்
Published on

ரக்‌ஷா பந்தனையொட்டி மத்தியப் பிரதேசத்தில் நூதனமான சாதனை ஒன்று படைக்கப்பட்டுள்ளது.

பெண்கள் தமது சகோதரர்கள் மற்றும் சகோதரர்களாகக் கருதுவோரின் மணிக்கட்டில் மஞ்சள் நூல் கட்டுவது ரக்‌ஷா பந்தன் பண்டிகையின் முக்கிய நிகழ்ச்சி. அதன்படி இந்த ஆண்டு வட மாநிலங்களில் கடந்த 7 ஆம் தேதி ரக்‌ஷா பந்தன் விழா கொண்டாடப்பட்டது.

போபாலில் அமைச்சர் விஸ்வா சாரங்கிற்கு 12 ஆயிரம் பெண்கள் ராக்கி கட்டினர். போபாலில் நிகழ்ந்த இந்த நிகழ்வு லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. அமைச்சர் விஸ்வா சாரங் கையில் கட்டப்பட்ட 12 ஆயிரம் ராக்கிகளோடு நிகழ்ச்சி முழுவதும் வலம் வந்தார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com