\
விளையாட்டுத்துறை அமைச்சரானார் ஒலிம்பிக் பதக்கம் வென்ற ரத்தோர்

விளையாட்டுத்துறை அமைச்சரானார் ஒலிம்பிக் பதக்கம் வென்ற ரத்தோர்

விளையாட்டுத்துறை அமைச்சரானார் ஒலிம்பிக் பதக்கம் வென்ற ரத்தோர்
Published on: 

மத்திய விளையாட்டுத்துறை அமைச்சராக முன்னாள் துப்பாக்கிச் சுடுதல் வீரர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே வசித்து வரும் தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இலாகாவுடன், விளையாட்டுத்துறையையும் கூடுதலாக கவனிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த விஜய் கோயலுக்கு, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. 47 வயதான ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், 2004 ஏதென்ஸ் ஒலிம்பிக்கில், வெள்ளிப் பதக்கம் வென்று தேசத்திற்கு பெருமை சேர்த்தவர். விளையாட்டுத்துறையைச் சேர்ந்தவரே, அத்துறையின் அமைச்சராக நியமிக்கப்பட்டிருப்பது விளையாட்டு ஆர்வலர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com