கபில் தேவையும், மாதுரி தீக்ஷித்தையும் எம்.பி.யாக்க பாஜக திட்டம் !

கபில் தேவையும், மாதுரி தீக்ஷித்தையும் எம்.பி.யாக்க பாஜக திட்டம் !
கபில் தேவையும், மாதுரி தீக்ஷித்தையும் எம்.பி.யாக்க பாஜக திட்டம் !

ராஜ்யசபா துணைத் தலைவரின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளது. எனவே இதற்கான தேர்தல் பாஜகவிற்கு சவாலனதாகவே பார்க்கப்படுகிறது.

ராஜ்யசபா துணைத் தலைவராக உள்ள ஜே.பி.குரியனின் பதவிக்காலம் ஜூலை 1-ம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே ராஜ்யசபா துணைத் தலைவர் பதவிக்கு விரைவில் தேர்தல் நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பொதுவாகவே ராஜ்யசபா துணைத் தலைவர் பதவி என்பது முக்கியத்துவம் வாய்ந்த பதவியாக கருதப்படுகிறது. ராஜ்யசபாவின் பல முக்கிய முடிவுகளை அவரே எடுப்பார். எனவே இந்த தேர்தலில் வெற்றி பெற பாஜகவும், காங்கிரஸ் கட்சியும் பல வியூகங்களை வகுத்து வருகின்றன. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் ஜூலை 18-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நடைபெற உள்ளது. எனவே இந்தக் கூட்டத் தொடரில்தான் இதற்கான தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னதாகவே காலியாக உள்ள 4 நியமன எம்.பி.க்களின் பதவி நிரப்பப்படும்.

இதனிடையே பிரபல நடிகை மாதுரி தீக்ஷித் மற்றும் முன்னாள் இந்தியக் கேப்டன் கபில் தேவ் ஆகியோரை நியமன எம்.பி.யாக நியமனம் செய்ய பாஜக திட்டமிட்டு வருகிறது. இதற்காக இவர்கள் இருவரையுமே பாஜக தேசிய தலைவர் அமித் ஷா சந்தித்து பேசியுள்ளார். கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், நடிகை ரேகா, தொழிலதிபர் அனு அகா ஆகியோரின் பதவிக்காலம் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்தான் நிறைவடைந்தது. இந்நிலையில் இந்தப் பதவிக்கு மீண்டும் சினிமா, கிரிக்கெட் பிரபலங்களையே நிறுத்த பாஜக திட்டமிட்டு வருகிறது.

அதேசமயம் ராஜ்யசபாபில் பாஜக தனிப்பெரும்பான்மையில் மிகப்பெரிய கட்சியாகும். ஆனால் சமீபத்தில் பாஜக கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி சமீபத்தில் விலகியது. எனவே காங்கிரஸ் மற்ற கட்சிகள் சேர்ந்து ராஜ்யசபா துணைத் தலைவர் தேர்தல் பதவியில் தங்களது பலத்தை காட்டி வெற்றி பெற போராடும். எனவே வருகின்ற நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் பாஜகவிற்கு சவாலனதாகவே பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com