\
மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் தேதி அறிவிப்பு!

மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் தேதி அறிவிப்பு!

மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் தேதி அறிவிப்பு!
Published on: 
தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் மார்ச் 26ம் தேதி நடைபெறும்  என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது
சசிகலா புஷ்பா, செல்வராஜ், திருச்சி சிவா, விஜிலா சத்யானந்த், டி.கே.ரங்கராஜன், முத்துக்கருப்பன் ஆகிய
6 எம்பிக்களின் பதவிக்காலம் ஏப்ரல்2ம் தேதி முடிவடைகிறது.
இதனையடுத்து அந்த காலியிடங்களுக்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி மார்ச் 26ம் தேதி தேர்தல் நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் 17 மாநிலங்களில் உள்ள 55 காலி இடங்களுக்கான தேர்தலும் அன்றைய தினமே நடைபெற உள்ளது. 
தமிழகத்தில் வேட்பு மனுத்தாக்கல் மார்ச் 6 முதல் 13 வரை நடைபெறும் என்றும், மார்ச் 16ம் தேதி வேட்புமனு பரிசீலனை, மார்ச் 18ம் தேதி வேட்புமனுவை திரும்பப் பெற கடைசி நாள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com