ஜூன் 10ஆம் தேதி மாநிலங்களவைத் தேர்தல் - தமிழகத்தில் 6 இடங்களில் காலியாகிறது!

ஜூன் 10ஆம் தேதி மாநிலங்களவைத் தேர்தல் - தமிழகத்தில் 6 இடங்களில் காலியாகிறது!

ஜூன் 10ஆம் தேதி மாநிலங்களவைத் தேர்தல் - தமிழகத்தில் 6 இடங்களில் காலியாகிறது!
Published on

தமிழ்நாடு உட்பட 15 மாநிலங்களில் காலியாக உள்ள இடங்களுக்கு ஜூன் 10ஆம் தேதி மாநிலங்களவைத் தேர்தல் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு உள்ளிட்ட 15 மாநிலங்களில் காலியாகும் 57 இடங்களுக்கு ஜூன் 10ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. தமிழகத்தில் டிகேஎஸ் இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி, நவநீதகிருஷ்ணன், ராஜேஷ்குமார், எஸ்.ஆர் பாலசுப்ரமணியன், ஏ.விஜயகுமார் உள்ளிட்டோரின் பதவிக்காலம் ஜூன் 29இல் முடிவடைகிறது.

தற்போது நடைபெறவுள்ள மாநிலங்களவை தேர்தலில் தமிழக சட்டப்பேரவையின் வலுப்படி திமுகவிற்கு 4 இடங்களும், அதிமுகவிற்கு 2 இடங்களும் ஒதுக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com