இந்தியா
அதிமுக விவகாரத்தில் மத்திய அரசு தலையிடாது: ராஜ்நாத் சிங்
அதிமுக விவகாரத்தில் மத்திய அரசு தலையிடாது: ராஜ்நாத் சிங்
தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழல் என்பது அதிமுகவின் உட்கட்சி விவகாரம் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
டெல்லியில் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த அவர், ஆளும் அதிமுகவில் வெடித்துள்ள பிரச்னையாலேயே தமிழக அரசியலில் குழப்பம் நிலவுவதாக கூறினார். அதிமுகவின் உட்கட்சி விவகாரத்தில் மத்திய அரசின் தலையீடு இல்லை என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.