\
காஷ்மீரில் குண்டு துளைக்காத வாகனம், உடைகள்: ராஜ்நாத் சிங் தகவல்

காஷ்மீரில் குண்டு துளைக்காத வாகனம், உடைகள்: ராஜ்நாத் சிங் தகவல்

காஷ்மீரில் குண்டு துளைக்காத வாகனம், உடைகள்: ராஜ்நாத் சிங் தகவல்
Published on: 

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் குண்டு துளைக்காத உடைகள் வழங்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். 

காஷ்மீர் சென்றுள்ள அவர், அனந்த்நாக் பகுதியில் காவல்துறையினருடன் கலந்துரையாடினார். அவர்கள் மத்தியில் பேசிய ராஜ்நாத், பாதுகாப்புப் படையினருக்கான குண்டு துளைக்காத உடைகளை வாங்க நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார். மேலும் காஷ்மீரில் அனைத்து காவல்நிலையங்களுக்கும் குண்டு துளைக்காத வாகனங்களை வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com