இந்தியா
ராஜ்நாத் சிங்கை சந்திக்கும் புதுச்சேரி நியமன எம்.எம்.ஏக்கள்
ராஜ்நாத் சிங்கை சந்திக்கும் புதுச்சேரி நியமன எம்.எம்.ஏக்கள்
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 3 நியமன எம்.எல்.ஏக்களும் நாளை மறுநாள் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்திக்க உள்ளனர்.
புதுச்சேரி சட்டப்பேரவைக்கு பா.ஜ.க மாநிலத்தலைவர் சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகிய மூன்று பேரும் நியமன எம்.எல்.ஏக்கள் ஆக்கப்பட்டனர். புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடியின் பரிந்துரையின்பேரில் இவர்கள் மூன்று பெறும் நியமிக்கப்பட்டு சட்டப்பேரவைக்கு சென்றனர். ஆனால் சட்டப்பேரவையில் தங்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்று நீண்ட நாட்களாக 3 எம்.எல்.ஏக்களும் குறை கூறி வருகின்றனர். அத்துடன் தங்களை எம்.எல்.ஏக்களாக அங்கீகரிக்காத காங்கிரஸ் அரசின் மீதும் புகார் கூற உள்ளனர். இதற்காக நாளை மறுநாள் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை, அவர்கள் 3 பேரும் சந்திக்கவுள்ளனர்.