
சேலத்தில் இன்று நடைபெறும் பாஜக மாநில இளைஞர் அணி மாநாட்டில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்கிறார்.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், அரசியல் கட்சிகள் பரப்புரையை தீவிரப்படுத்தியுள்ளன. குறிப்பாக பாஜக, காங்கிரஸ் ஆகிய தேசிய கட்சி தலைவர்கள் தமிழகத்தில் முகாமிட்டு வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிர்மலா சீதாராமன், பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் அடுத்தடுத்து தமிழகம் வந்தனர்.
அந்த வரிசையில், சேலத்தில் இன்று நடைபெறும் பாஜக மாநில இளைஞர் அணி மாநாட்டில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்கிறார். அவர் தனி விமானம் மூலம் சேலம் வரும் நிலையில், பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.