மத்திய அமைச்சர் அனந்தகுமார் மருத்துவமனையில் அனுமதி!

மத்திய அமைச்சர் அனந்தகுமார் மருத்துவமனையில் அனுமதி!

மத்திய அமைச்சர் அனந்தகுமார் மருத்துவமனையில் அனுமதி!
Published on

பெங்களூரில் சிகிச்சை பெற்று வரும் மத்திய அமைச்சர் அனந்தகுமாரை, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நாடாளுமன்ற சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஆகியோர் நேரில் சென்று நலம் விசாரித்தனர்.

மத்திய அரசின் ரசாயனம் மற்றும் உரம், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சராக இருந்து வருபவர் அனந்தகுமார். கர்நாடக மாநிலத்தை சேர்ந்த இவருக்கு 2 மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதற்காக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள் குழு அவருக்கு புற்று நோய் இருப்பதை கண்டறிந்தனர்.

இதையடுத்து, அருக்கு பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடந்தது. பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார். பிறகு, உடல் நிலை சீரானதை தொடர்ந்து இந்தியா திரும்பினார். இந்நிலையில், அவருக்கு மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து, அவர் பெங்களூரு பசவனகுடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் குழு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இது பற்றி அறிந்ததும் நாடாளுமன்ற அவைத் தலைவர் சுமித்ரா மகாஜன், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் பெங்களூருவுக்கு வந்து மத்திய அமைச்சர் அனந்தகுமாரின் உடல் நலம் குறித்து டாக்டர்களிடம் விசாரித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com