\
தினமும் ஐந்தாறு பயங்கரவாதிகளை சுட்டுவீழ்த்துகிறது ராணுவம்: ராஜ்நாத் சிங்

தினமும் ஐந்தாறு பயங்கரவாதிகளை சுட்டுவீழ்த்துகிறது ராணுவம்: ராஜ்நாத் சிங்

தினமும் ஐந்தாறு பயங்கரவாதிகளை சுட்டுவீழ்த்துகிறது ராணுவம்: ராஜ்நாத் சிங்
Published on

இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் இந்திய வீரர்கள் நாள் ஒன்றுக்கு குறைந்தது ஐந்து அல்லது ஆறு பயங்கரவாதிகளை சுட்டு வீழ்த்துவதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் மீது இந்திய வீரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்துவதாக பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் புகார் கூறுகின்றனர். இந்நிலையில் பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசிய, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், “இந்திய வீரர்களிடம், முதலில் நீங்கள் தாக்குதல் நடத்தாதீர்கள். பாகிஸ்தான் படைகள் தாக்கினால், அதற்கு தகுந்த பதிலடியை கொடுங்கள் என்று கூறியிருக்கிறேன்” என்றார்.

மேலும், இந்தியா பலவீனமான நாடு இல்லை என்றும் அது பலமான நாடாக மாறிவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதேபோல் சீனாவுடன் உள்ள சர்ச்சையை தீர்க்க, இந்தியா தாயாராக உள்ளதாக ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com