திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மகள் ஐஸ்வர்யாவுடன் ரஜினிகாந்த் தரிசனம்!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மகள் ஐஸ்வர்யாவுடன் ரஜினிகாந்த் தரிசனம்!
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மகள் ஐஸ்வர்யாவுடன் ரஜினிகாந்த் தரிசனம்!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் அவரது மகள் ஐஸ்வர்யா சுப்ரபாத சேவையில் சுவாமி தரிசனம் செய்தனர்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக நடிகர் ரஜினிகாந்த் அவரது மகள் ஐஸ்வர்யா நேற்று இரவு திருமலைக்கு வந்தனர். திருமலையில் உள்ள டி.எஸ் ஆர் விருந்தினர் மாளிகையில் இரவு தங்கினார். இன்று அதிகாலை ஏழுமலையான் கோயிலில் நடைபெற்ற சுப்ரபாத சேவையில் சுவாமி தரிசனம் செய்வதற்காக வந்த ரஜினிகாந்த் மற்றும் அவரது மகள் ஐஸ்வர்யாவை செயல் அதிகாரி தர்மா ரெட்டி கோயில் மகா துவாரம் முன்பு வரவேற்று சுவாமி தரிசனம் செய்துவைத்தார்.

பின்னர் ரங்கநாதர் மண்டபத்தில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கி வேத பண்டிதர்கள் மூலம் வேத ஆசீர்வாதம் செய்து வைத்தனர். இதனையடுத்து செய்தியாளரிடம் பேசிய ரஜினிகாந்த், அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவி ஏற்றுள்ள நிலையில் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com