கின்னஸ் சாதனையில் இடம்பெற்ற 6 கி.மீ ரங்கோலி கோலம்

கின்னஸ் சாதனையில் இடம்பெற்ற 6 கி.மீ ரங்கோலி கோலம்

கின்னஸ் சாதனையில் இடம்பெற்ற 6 கி.மீ ரங்கோலி கோலம்
Published on

ராஜஸ்தானில் ஆறு கிலோ மீட்டர் தூரத்திற்கு வரையப்பட்ட வண்ணமிகு ரங்கோலி கோலம் கின்னஸ் சாதனையில் இடம் பெற்றுள்ளது. 

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ஸ்வர் கோவிந்தம் என்ற இசை நிகழ்ச்சிக்காக ரங்கோலி கோலம் வரையப்பட்டுள்ளது. இந்த இசை நிகழ்ச்சியில் 1,300 தன்னார்வலர்கள் பல்வேறு இசைக்கருவிகள் கொண்டு இசை நிகழ்ச்சிகள் நடத்துகின்றனர். இந்நிகழ்ச்சியாக ‌65 ஆயிரம் சதுர அடியில் பிரம்மாண்ட ரங்கோலி கோலம் வரையப்பட்டுள்ளது. இந்தக் கோலம் பார்ப்பவர்களை ஆச்சர்யப்படவைக்கும் வகையிலும், கண்ணை கவரும் அழகுடனும் அமைந்துள்ளது. அத்துடன் இந்த பிரம்மாண்ட கோலம் கின்னஸ் சாதனையில் இடம் பெற்றது. 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com