குழந்தை திருமணத்திற்கு தடையில்லை- பாஜக வேட்பாளரின் வாக்குறுதியால் சர்ச்சை..!

குழந்தை திருமணத்திற்கு தடையில்லை- பாஜக வேட்பாளரின் வாக்குறுதியால் சர்ச்சை..!

குழந்தை திருமணத்திற்கு தடையில்லை- பாஜக வேட்பாளரின் வாக்குறுதியால் சர்ச்சை..!
Published on

ராஜஸ்தானில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரும்பட்சத்தில் குழந்தைகள் திருமணத்திற்கு போலீஸ் தலையீடு இருக்காது என பாஜக வேட்பாளர் ஒருவர் வாக்குறுதி அளித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தல் டிசம்பர் 7-ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் பதிவாகும் வாக்குகள் எண்ணிக்கை டிசம்பர் 11-ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. அடுத்தாண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தற்போதைய சட்டப்பேரவைத் தேர்தல்கள் மக்களவை தேர்தலுக்கான முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது. இதனையடுத்து பாஜக, காங்கிரஸ் கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ராஜஸ்தானில் பாஜக வேட்பாளர் ஒருவர் மக்களுக்கு அளித்துள்ள வாக்குறுதி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சோஜத் சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளரான சோபா சவுகான், ராஜஸ்தானில் பாஜக ஆட்சிக்கு வந்தால் குழந்தைகள் திருமணத்திற்கு போலீஸ் தலையீடு இருக்காது என தொகுதி மக்களுக்கு வாக்குறுதி அளித்துள்ளார். தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட போது அவர் இதனை தெரிவித்துள்ளார். ராஜஸ்தானில் தேவாசி சமூக மக்கள் குழந்தை திருமணத்தை நடத்தும்போது போலீசார் அவர்களை குறுக்கீடு செய்வதாகவும் குறிப்பிட்டிருந்தார். சோபா சவுகானின் இத்தகைய பரப்புரை கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோக்களும் சமூக வலைத்தளங்களும் வைரலாகி வருகின்றன. இந்தியாவில் குழந்தைகள் திருமணத்திற்கு அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com