Rajasthan government employee arrested for spying for Pakistan
Rajasthan government employee arrested for spying for Pakistanweb

ராஜஸ்தான் | பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த அரசு ஊழியர்?.. சந்தேகத்தின் பேரில் கைது!

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக யூடியூபர் கவிதா மல்ஹோத்ரா உள்ளிட்ட 2 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது ராஜஸ்தானை சேர்ந்த அரசு ஊழியர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளது காவல்துறை.
Published on

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக சந்தேகத்தின் பேரில் ராஜஸ்தானில் அரசு ஊழியர் ஒருவரை அம்மாநில காவல்துறை கைது செய்துள்ளது.

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக மீண்டும் ஒருவர் கைது!

ஷாகுர் கான் என்ற இந்த நபர் ராஜஸ்தான் மாநில முன்னாள் அமைச்சரின் உதவியாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஷாகுர் கானின் தொலைபேசி தரவுகள் அடிப்படையிலும் அவர் பாகிஸ்தானுக்கு சில முறை சென்று வந்ததன் அடிப்படையிலும் இந்த கைதை செய்திருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

ராஜஸ்தான் அரசு ஊழியர் கைது
ராஜஸ்தான் அரசு ஊழியர் கைது

இதற்கு முன்னதாக யூ டியூபர் கவிதா மல்ஹோத்ரா, சிஆர்பிஎஃப் வீரர் மோட்டி ராம் ஜாட்டு உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டிருந்தனர். பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த புகாரில் இதுவரை பத்துக்கு மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com