ராஜஸ்தானைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தனக்கு கிடைக்கவேண்டிய இழப்பீடு வழங்கப்படாததால் தற்கொலை செய்துக்கொள்வதாய் மிரட்டல்
விவசாயி மாதிரிப்படம்புதியதலைமுறை

விபரீத அறிவிப்பு.. விவசாயிக்கு பாதுகாப்பு கொடுத்ததற்காக ரூ.9.91 லட்சம் கேட்ட போலீஸ்.. என்ன நடந்தது?

விவசாயியின் பாதுகாப்புக்காக செலவான தொகையை செலுத்துமாறு நோட்டிஸ் அனுப்பிய அரசு
Published on

சிங்கத்திற்கு பயந்து புலிக்குகைக்குள்ளே தஞ்சமடைந்த கதையாய், ராஜஸ்தானில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ராஜஸ்தானைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தனக்கு கிடைக்கவேண்டிய இழப்பீடு வழங்கப்படாததால் தற்கொலை செய்துக்கொள்வதாய் மிரட்டல் விடுத்ததை அடுத்து, போலிசார் அவரது உயிருக்கு பாதுகாப்பு வழங்கினர். இந்நிலையில் விவசாயிக்கு பாதுகாப்பு வழங்கிய செலவு ரூ.9 லட்சத்து 91 ஆயிரம் ரூபாயை விவசாயி செலுத்த வேண்டும் என்று நோட்டிஸ் அனுப்பிய சம்பவம் அப்பகுதியில் விவாதத்திற்குரியதாய் மாறியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனு (Jhunjhunu) மாவட்டம் கோதடா கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி வித்யாதர் யாதவ். இவர் தனது விவசாய நிலத்தில் விவசாயம் செய்து வந்துள்ளார். இவரது கிராமத்திற்கு அருகில் சிமெண்ட் ஆலை ஒன்றை அமைப்பதற்காக, அப்பகுதியிலிருந்த நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் வித்யாதர் யாதவின் விவசாய நிலம் கையகப்படுத்தப்பட்டதுடன், அவரின் வீடும் இடிக்கப்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த வித்யாதர், தனக்கு ரூ.6 கோடி பணமும், சிமண்ட் ஆலையில் வேலையும் வழங்க வேண்டும் என விண்ணப்பித்து இருந்தார். ஆனால், அரசு தரப்பில் 4 கோடி ரூபாய் வழங்க முன் வந்துள்ளனர். ஆனால், அதனை அவர் ஏற்கவில்லை.

ஆனால், இவருக்கு வழங்கப்பட வேண்டிய இழப்பீடு கிடைக்காத நிலையில், மனமுடைந்த இவர், குடியரசுத் தலைவருக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில், ”டிசம்பர் 11-க்குள் எனக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை என்றால், நான் கருணைக்கொலை செய்துக்கொள்வேன்” என்று மிரட்டல் விடுத்திருந்தார்.

இந்நிலையில், டிசம்பர் 11ம் தேதி வரை இவருக்கு இழப்பீடுத்தொகை கிடைக்கப்படவில்லை. மேலும் வித்யாசாகரின் மிரட்டலை அடுத்து அவரின் உயிரை பாதுகாக்க, போலிசார் இரண்டு துணை காவல் கண்காணிப்பாளர்கள், இரண்டு இன்ஸ்பெக்டர்கள், 3 சப் இன்ஸ்பெக்டர்கள், உதவி சப் இன்ஸ்பெக்டர்கள் 18 தலைமைக்காவலர்கள் உள்பட 99 காவலர்களுடன் பெரும் பாதுகாப்பு படை வித்யாதர் யாதவ் பாதுகாப்பு பணிக்காக அமர்த்தப்பட்டனர்.

கிட்டதட்ட ஒரு வாரம் இவர்கள் பாதுகாப்பு கொடுத்துள்ளனர். பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்ட போலிசாரின் போக்குவரத்து செலவு மற்றும் இதர செலவுகள், தவிர அனைவரும் வந்துச்செல்ல அரசு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டதால் அரசுக்கு 9,91,577 ரூபாய் செலவானதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில், பாதுகாப்பிற்காக செலவிடப்பட்ட தொகையை வித்யாதர் யாதவ் செலுத்தவேண்டும் என்று அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இது குறித்து வித்யாதர் யாதவ் பேசும் பொழுது, ”எனக்கு பாதுகாப்பு வழங்கும்படி அரசை நான் கேட்கவில்லை. ஆதனால் இத்தொகையை செல்லுத்த என்னால் இயலாது” என்று கூறுகிறார்.

இது குறித்து எஸ்பி ஜூன்ஜுனு ஷரத் சவுத்ரி பேசுகையில், "யாதவ் தன்னைத்தானே தீக்குளிக்க முயன்றார், ஆனால் காவல்துறையால் தடுத்து நிறுத்தப்பட்டார். ஆகையால் அவரின் பாதுகாப்புக்காக போலீஸ் படை அனுப்பப்பட்டதால் செலவுக்கான மீட்புக்காக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது" என்று கூறினார்.

இதனிடையே வித்யாதர் யாதவ்க்கு கிடைக்கவேண்டிய இழப்பீட்டுத்தொகை சுமார் ₹ 3.8 கோடி கொடுக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com