ராஜஸ்தானில் அசோக் கெலாட்  அமோக வெற்றி

ராஜஸ்தானில் அசோக் கெலாட் அமோக வெற்றி

ராஜஸ்தானில் அசோக் கெலாட் அமோக வெற்றி
Published on

ராஜஸ்தானில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் கட்சி முதல்வர் வேட்பாளர்களில் ஒருவரான அசோக் கெலாட் வெற்றி பெற்றுள்ளார்.

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா, மிசோரம் ஆகிய ஐந்து மாநிலத் தேர்தல்கள் சென்ற மாதம் 12ஆம் தேதி தொடங்கி கடந்த 7ஆம் தேதி வரை நடந்தன. இறுதிக்கட்டமாக கடந்த 7ஆம் தேதி ராஜஸ்தான் மற்றும் தெலங்கானாவில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்தது.

வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஐந்து மாநிலங்களில் ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்று வந்தது. தெலங்கானாவில் டிஆர்எஸ் கட்சியும் மிசோரமில் எம்என்எப் கட்சியும் முன்னிலை வகிக்கின்றன.

இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த, ராஜஸ்தானின் டாங்க் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் சச்சின் பைலட், இன்றிலிருந்து சரியாக ஒரு வருடத்திற்கு முன்புதான் ராகுல்காந்தி காங்கிரஸ் தலைவரானார் எனவும் எங்களின் வெற்றி அவருக்கான பரிசு எனவும் தெரிவித்தார். ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் சூழல் நிலவி வருவதாகம் எனினும் இறுதி முடிவு காத்திருக்கிறோம் எனவும் குறிப்பிட்டார். 

இந்நிலையில், ராஜஸ்தானில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் கட்சி முதல்வர் வேட்பாளர்களில் ஒருவரான அசோக் கெலாட் வெற்றி பெற்றுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com