"முட்டாளே சாவர்க்கரை பற்றி பேசுவதற்கு என்ன தகுதி இருக்கிறது"- ராகுலை சாடிய ராஜ் தாக்கரே!

"முட்டாளே சாவர்க்கரை பற்றி பேசுவதற்கு என்ன தகுதி இருக்கிறது"- ராகுலை சாடிய ராஜ் தாக்கரே!
"முட்டாளே சாவர்க்கரை பற்றி பேசுவதற்கு என்ன தகுதி இருக்கிறது"- ராகுலை சாடிய ராஜ் தாக்கரே!

சாவர்க்கர் மீது ராகுல் காந்தி விமர்சனம் வைத்திருந்த நிலையில், அதையொட்டி அவரை கடுமையாக விமர்சித்துள்ளார் மகாராஷ்ட்ரா நவிர்மன் சேனா-வின் தலைவர் ராஜ் தாக்ரே.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி, மகாராஷ்டிரா மாநிலத்தில் 'பாரத் ஜோடோ யாத்திரை' மேற்கொண்ட போது, “ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தந்தவாதியான சாவர்க்கர், ஆங்கிலேயர்களிடம் பென்ஷன்வாங்கிக்கொண்டு, காங்கிரஸ் போராட்டக்காரர்களை காட்டிக்கொடுத்தார்” என்றார். மேலும் சாவர்க்கர் எழுதியதாக ஒரு கடிதத்தையும் காண்பித்தார் ராகுல். அதில் கடைசி வரியில், “ஐயா நான் உங்கள் வேலைக்காரனாக இருக்க விரும்புகிறேன்.  இப்படிக்கு சாவர்க்கர்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதைத்தொடர்ந்து, ராகுலுக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ் சார்பிலும் சாவர்க்கர் கொள்கைகளை பின்பற்றுவோர் சார்பிலும் கடும் எதிர்ப்புகள் வரத்தொடங்கியது. உதாரணத்துக்கு மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், "சுதந்திரம் வழங்கப்படுவதற்கு முன்பு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட ஒரே தலைவர் சாவர்க்கர். அவரைப் போன்று கொடுமைகளை அனுபவித்த விடுதலைப் போராளிகள் வேறு யாருமில்லை’’ என்று கூறினார்.

மற்றொருபக்கம் பாலா சாஹேப் சிவசேனா கட்சியின் செய்தித்தொடர்பாளரும், மகாராஷ்டிரா மாநில ஒருங்கிணைப்பாளருமான நரேஷ் மஸ்கே, "மகராஷ்டிரா மண்ணின் மகத்தான மனிதரை இழிவுபடுத்துவதை நாங்கள் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது. ராகுல் காந்தியின் கருத்திற்காக காவல்துறையினர் அவர்மீது வழக்கு பதிவுசெய்து அவரை கைது செய்ய வேண்டும்" என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் பாலாசாஹேப் சிவசேனா கட்சி புகாரின் பெயரில் ராகுல்காந்தி மீது தானே நகர் காவல் நிலையத்தில் ஐபிசி 500, 501 ஆகி பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்றைய தினம் நடந்த யாத்திரையொன்றில், ராகுல் காந்தியை குறிப்பிட்டு பேசியுள்ளார் மகாராஷ்ட்ரா நவிர்மன் சேனாவின் செயலர் ராஜ் தாக்ரே. அவர் பேசுகையில், “முட்டாளே… சிறையில் அடைக்கப்பட்டு, இவ்வளவு வேதனைகளை அனுபவித்த சாவர்க்கரைப் பற்றி பேசுவதற்கு உங்களுக்கு என்ன தகுதியுள்ளது?” என்று கடுமையாக பேசியுள்ளார்.

பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு சாவர்க்கர் எழுதிய கடிதத்தை குறிப்பிட்டு பேசியுள்ள அவர், “அன்று சாவர்க்கர் செய்தது, யுக்தி! இதை அன்றே, `கிருஷ்னரும் சொல்லியிருக்கிறார். மகாராஜர் சிவாஜி கூட, தனது கோட்டைகளை மிர்சா ராஜா ஜெய்சிங்கிடம் கொடுத்திருந்தார். அவையெல்லாம் பரிசுகள் அல்ல… யுக்தி.

பாஜக மற்றும் காங்கிரஸ் என இரு கட்சிகளுக்கும் சொல்கிறேன்... நேரு, இந்திரா காந்தி போன்ற நமது வரலாற்று தலைவர்களை அவப்பெயருக்கு உள்ளாக்குவது தேவையில்லாத செயல். நம் நாட்டில் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்பு என பலவற்றில் சிக்கலிலுள்ளது. அதற்காக போராடுவோம். ராகுல்காந்தி, தேர்தல் களத்துக்கு தயாரானால் சிறப்பு” என்றுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com