\
பாடகர் அத்னன் சமிக்கு பத்மஸ்ரீ: ராஜ் தாக்கரே எதிர்ப்பு

பாடகர் அத்னன் சமிக்கு பத்மஸ்ரீ: ராஜ் தாக்கரே எதிர்ப்பு

பாடகர் அத்னன் சமிக்கு பத்மஸ்ரீ: ராஜ் தாக்கரே எதிர்ப்பு
Published on

பாலிவுட் பாடகரும் இசையமைப்பாளருமான அத்னன் சமிக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டது சர்ச்சையாகியுள்ளது.

அத்னன் சமி, பாகிஸ்தானில் பிறந்தவர் என்பதால் அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கக் கூடாது என ராஜ் தாக்கரேவின் மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அத்னன் சமிக்கான விருது அறிவிப்பை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும் அக்கட்சி வலியுறுத்தியுள்ளது.

பாகிஸ்தானின் லாகூரில் பிறந்தவரான பாடகர் அத்னன் சமி, ஓராண்டு விசா மூலம் 2001ஆம் ஆண்டு இந்தியா வந்தவர். 2015ஆம் ஆண்டு அவரது பாஸ்போர்ட் காலாவதியான நிலையில் மனிதாபிமான அடிப்படையில் தமக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதன்பேரில், பாகிஸ்தானைச் சேர்ந்தவரான பாடகர் அத்னன் சமிக்கு 2016 ஆம் ஆண்டு ஜனவரியில் இந்திய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com