கண் இமைக்கும் நொடியில் நிகழ்ந்த சோகம்.. கை நழுவி மூன்றாவது தளத்திலிருந்து விழுந்த குழந்தை பலி!

குழந்தைகளுக்கு விடுமுறை தொடங்க இருக்கின்ற நிலையில், பெற்றோர்கள் குழந்தைகளுடன் மால், பார்க், பீச் போன்ற இடங்களுக்குச் செல்வது அதிகரித்து வரும் நிலையில் அவர்களை அதிக கவனத்துடன் கவனிக்கவேண்டும்
மால்
மால்twitter

சமீபத்தில் ராய்ப்பூரில் மால் ஒன்றில் தந்தையின் கையிலிருந்த ஒரு வயது குழந்தை ஒன்று தவறி மூன்றாவது மாடியிலிருந்து கீழேவிழுந்து இறந்த சம்பவம் சம்பவம் மக்களிடையே அதிர்சியை ஏற்பட்டுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலம் ரெய்பூரில், விடுமுறையை கழிக்கவேண்டி, ஒருவர் தன் மனைவி மற்றும் இருகுழந்தைகளுடன் அருகில் இருக்கும் மால் ஒன்றுக்கு வந்துள்ளனர். இதில் அவர் தன் ஒரு கையில் ஒரு வயது நிரம்பிய பெண்குழந்தையை வைத்துக்கொண்டும், மற்றொரு கையில் 5 வயது நிரம்பிய சிறுவனை பிடித்துக்கொண்டும் மாலின் மூன்றாவது தளத்திலிருந்து கீழே இறங்குவதற்காக எஸ்கலேட்டரை நாடியிருக்கிறார்.

மால்
வேலூர் | வழக்கறிஞர் எனக்கூறி இளம்பெண்ணிடம் உதவிகேட்ட முதியவர்; அடுத்தடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்!

சுட்டியான ஐந்து வயது சிறுவன் எக்ஸ்கலேட்டரை நிறுத்த நினைத்து, அதில் உள்ள பட்டனை அழுத்த முற்பட்டிருக்கிறார். இதை பார்த்த அவரின் தந்தை, சிறுவனை தடுத்து நிறுத்த முயன்றபொழுது அவரின் கைகளிலிருந்த ஒரு வயது குழந்தை நழுவி கீழே விழுந்தது. அனைவரும் ஸ்தம்பித்துவிட்டனர். தரைத்தளத்தில் இருந்தவர்கள் அலறிக்கொண்டு குழந்தையை தூக்கி காப்பாற்ற முயற்சித்துள்ளனர்.

குழந்தை கீழே விழுந்ததில் காயம் ஏதும் ஏற்பட்டாததால் குழந்தை பிழைத்துக்கொண்டுவிடும் என அனைவரும் நினைத்திருந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தது அங்கிருந்தவர்களிடையே அதிர்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

CCTV கேமரா உதவியினால் படம் பிடித்த இந்த சம்பவமானது சமூகவலைதளங்களில் வேகமாக பரவி மக்களிடையே அதிர்சியை ஏற்படுத்தி வருகிறது.

பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளுடன் பொது இடங்களான மால், பார்க், பீச் போன்ற இடங்களுக்கு குழந்தைகளுடன் செல்லும் போது அதிக கவனமுடன் இருக்க வேண்டும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com