\
டெல்லியில் தொடரும் பலத்த மழை:  தனித் தீவுகளாக மாறிய பல பகுதிகள்

டெல்லியில் தொடரும் பலத்த மழை: தனித் தீவுகளாக மாறிய பல பகுதிகள்

டெல்லியில் தொடரும் பலத்த மழை: தனித் தீவுகளாக மாறிய பல பகுதிகள்
Published on: 

இன்று காலை முதல் டெல்லி நகரில் பெய்து வரும் கனமழையால் பல பகுதிகள் தனித்தீவுகளாக மாறியுள்ளன. பல முக்கியமான சாலைகளில் மழைநீர் தேங்கியதால் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இங்குள்ள பிரதான சாலைகளில் தேங்கிய நீரை அப்புறப்படுத்தும் பணிகளில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். தவ்லான கான் பகுதி, எம்பி சாலையில் பாத்ரா மருத்துவனை, பாலம் மற்றும் சாட்டா ரயில் பாதை அருகிலும் நீர் பெருமளவில் தேங்கியுள்ளதாக டெல்லி நகர போக்குவரத்துக் காவல்துறை தெரிவித்துள்ளது.

தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக டெல்லியின் பல பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால், வாகனங்கள் மெல்ல ஊர்ந்து செல்கின்றன என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இன்று வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் எனவும், சில இடங்களில் மிதமானது முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் எனவும் இந்திய வானிலை ஆரா்ய்ச்சி மையம் அறிவித்துளளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com