டெல்லியில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையின் காரணமாக பல்வேறு சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். பேருந்துகள், இருசக்கர வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதேபோல், நகரின் தாழ்வான பகுதிகளிலும் மழைநீர் தேங்கியதால் பொதுமக்களும் இன்னலை சந்தித்துள்ளனர். இதனிடையே, டெல்லியில் இன்று பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மிதமானது முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.