ரயில் பயணங்களில் பாதுகாப்பை அதிகரிக்க இஸ்ரோவின் உதவியைப் பெற இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது. இத்தகவலை ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்தார்.
இஸ்ரோ உருவாக்கியுள்ள பல புதிய தொழில் நுட்பங்கள் ரயில்களை பாதுகாப்பான முறையில் இயக்க உதவும் என்று அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்தார். இது தொடர்பாக இஸ்ரோ தலைவர் கிரண் குமாரை சில நாட்களுக்கு முன் சந்தித்து பேசியதாகவும் கூறினார். தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்திக்கொள்வதில் தாங்களே முன்னோடியாக திகழ்வதாகவும், வங்கிகள் 1990களில்தான் கம்ப்யூட்டரை பயன்படுத்த தொடங்கியதாகவும் ஆனால் ரயில்வே துறை 1960களிலேயே அதை பயன்படுத்த தொடங்கிவிட்டதாகவும் பியுஷ் கோயல் தெரிவித்தார்.