Waiting List Cancellation: கடந்த 3 ஆண்டுகளில் ரயில்வேக்கு கிடைத்தது இத்தனை கோடிகளா?

வெயிட்டிங் லிஸ்ட் எனப்படும் காத்திருப்பு பட்டியலில் இருந்த டிக்கெட்டுகளை பயணிகள் ரத்து செய்ததன் மூலம் ரயில்வேக்கு 3 ஆண்டுகளில் சுமார் 1,230 கோடி ரூபாய் கிடைத்திருக்கிறது.
Rail
Railpt desk

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் விவேக் பாண்டே தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ரயில்வே அமைச்சகத்திடம் சில தகவல்களை பெற்றுள்ளார். அதில், 2021ஆம் ஆண்டு காத்திருப்பு பட்டியலில் இருந்த 2 கோடியே 53 லட்சம் டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டிருப்பதாகவும், அதிலிருந்து இந்திய ரயில்வேக்கு 242 கோடியே 68 லட்சம் ரூபாய் கிடைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Rail
Railpt desk

2022ஆம் ஆண்டில் காத்திருப்பு பட்டியலில் இருந்த 4 கோடியே 60 லட்சம் டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், 439 கோடியே 16 லட்சம் ரூபாய் கிடைத்ததாகவும்,

2023ஆம் ஆண்டில் 5 கோடியே 26 லட்சம் டிக்கெட்டுகளை பயணிகள் ரத்து செய்ததில் 505 கோடி ரூபாய் கிடைத்ததாகவும் ரயில்வே தெரிவித்துள்ளது.

2024ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் மட்டும் 45 லட்சத்து 86 ஆயிரம் டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன. அதன்மூலம், 43 கோடி ரூபாய் வருவாய் வந்திருக்கிறது.

மொத்தமாக ரூ 1,229.85 கோடி ரயில்வேக்கு கடந்த மூன்று ஆண்டுகளில் கிடைத்துள்ளது தெரியவந்துள்ளது.

ரயில் பயணத்தை பயணிகள் அதிகம் விரும்பும் நிலையில், தேவைக்கேற்ப போதிய சேவை இல்லாததையே இது காட்டுகிறது. மேலும், 720 இருக்கைகள் உள்ள ஒரு ரயிலுக்கு 600 இருக்கைகள் வரை காத்திருப்பு பட்டியலை வழங்குவது ஏன் எனவும் கேள்வி முன்வைக்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com