\
டிராக்டர் பேரணியால் ரயிலைத் தவறவிட்டவர்களுக்கு பணத்தைத் திரும்ப தருவோம்: வடக்கு ரயில்வே

டிராக்டர் பேரணியால் ரயிலைத் தவறவிட்டவர்களுக்கு பணத்தைத் திரும்ப தருவோம்: வடக்கு ரயில்வே

டிராக்டர் பேரணியால் ரயிலைத் தவறவிட்டவர்களுக்கு பணத்தைத் திரும்ப தருவோம்: வடக்கு ரயில்வே
Published on: 

இன்று டெல்லியில் நடந்த டிராக்டர் பேரணியால் ரயிலை தவறவிட்ட பயணிகளுக்கு, டிக்கெட் தொகையை திரும்பத்தருவோம் என்று வடக்கு ரயில்வே அறிவித்தது.

இன்று நடந்த டிராக்டர் பேரணியின்போது ஏற்பட்ட வன்முறைகளால், டெல்லியின் பல பகுதிகளில் அசாதாரண சூழல் ஏற்பட்டு போக்குவரத்து பாதித்தது. இதனால் டெல்லி மெட்ரோவின் பல்வேறு பாதையில் உள்ள பல ரயில் நிலையங்களும் மூடப்பட்டன. விவசாயிகளின் போராட்டத்தால் டெல்லியில் உள்ள ரயில் நிலையங்களை அடைய முடியாத பயணிகளின் டிக்கெட்டுகளை திருப்பித் தருவதாக வடக்கு ரயில்வே அறிவித்தது.

"விவசாயிகள் போராட்டம் காரணமாக டெல்லி பகுதி ரயில் நிலையங்களில் நிலையங்களை அடையவும், ரயில்களைப் பிடிக்கவும் முடியாத பயணிகள், முழு பணத்தைத் திரும்பப்பெற விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்" என வடக்கு ரயில்வே அறிவித்திருக்கிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com